ரயில் டிக்கெட் ரத்து நடைமுறையில் ஏப். 1 முதல் புதிய மாற்றங்கள்

ரயில் புறப்படுவதற்கு 72 மணி நேரம் முன்பாக ரத்து செய்தால் மட்டுமே தற்போதைய நடைமுறைப்படி கட்டணம் திருப்பித் தரப்படும். 72 மணி நேரம் முதல் 24 மணி நேரத்துக்குள் ரயில் டிக்கெட்டை ரத்து செய்தால், ரத்து கட்டணம் தவிர, பயணக் கட்டணத்திலும் 25% பிடிக்கப்படும். ரயில் புறப்படுவதற்கு 8 மணி நேரத்துக்கு முன்பாக 24 மணி நேரத்துக்குள் டிக்கெட்டை ரத்து செய்தால், 50% தொகை மட்டுமே திருப்பித் தரப்படும்Long Distance Bus & Rail
ரயில் புறப்படுவதற்கு 30 நிமிடங்கள் முன்பு வரை ரயிலில் ஏறும் இடத்தை பயணிகள் மாற்றிக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது, பயணிகள் பட்டியல் தயாரிக்கும் வரையே ஏறும் ரயில் நிலையத்தை மாற்றிக் கொள்ளும் வசதி உள்ளது. கடைசி நேரத்தில் ரயில் டிக்கெட்டுகள் ரத்து செய்வதை தவிர்க்கவே புதிய விதிகள் அமல்படுத்தப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ரயில் டிக்கெட் ரத்து கட்டணம் தொடர்பான நடைமுறைகளில் ஏப். 1 முதல் புதிய மாற்றங்கள் அமலாகின்றன.